இந்திய விமானப் படையானது, பிரம்மோஸ் ஏவுகணையின் தொலைவு வரம்பு நீட்டிக்கப் பட்ட ஏவுகணை வடிவத்தினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
இது Su-30 MKI போர் விமானத்தில் இருந்து ஒரு கப்பலினை இலக்காகக் கொண்டு ஏவப் பட்டது.
பிரம்மோஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட வரம்பானது கடலில் உள்ள 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது.
பிரம்மோஸ் மீயொலி சீர்வேக ஏவுகணையானது இரண்டு-நிலை திட உந்துசக்தி இயந்திரங்களைக் கொண்டுள்ளதோடு, அதன் முதல் கட்ட இயந்திரமானது அந்த ஏவுகணையினை மீயொலி வேகத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது.
இதன் இரண்டாம் நிலையானது, திரவ நிலை ராம்ஜெட் இயந்திரம் ஆகும்.
இது சீர்வேக இயக்க நிலையில் 3 மாக் (ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு) வேகத்தில் இயங்குகிறது.