பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (Defense Research and Development Organisation - DRDO) “பிரம்மோஸ்”என்ற மீயொலிவேக ஏவுகணையை ஒடிசாவில் உள்ள சந்திப்பூரிலிருந்து சோதனை செய்தது.
நடுத்தர தூர வரம்பு கொண்ட இந்த ஏவுகணையானது போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், நிலம் அல்லது போர் விமானங்களிலிருந்து ஏவப்படும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணையானது இந்தியக் கடற்படை, ராணுவம் மற்றும் விமானப் படை ஆகியவற்றுடன் இணைத்து செயல்படுத்தப் படுகின்றது.
நடுத்தர தூர வரம்பு கொண்ட பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியாவிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக பிலிப்பைன்ஸ் உறுதி அளித்துள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணை
பிரம்மோஸ் என்பது இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPOM ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
இந்தியா MTCR என்ற ஒப்பந்தத்திற்குள் (ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு வரம்பு - Missile Technology Control Regime) நுழைந்த பிறகு, பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்பை 600 கி.மீ. ஆக நீட்டித்துள்ளது.
மேலும் அதிவேகமாகச் செயல்படும் ஏவுகணைகளில் இதுவும் ஒன்றாகும். இது 2.8 மாக் வேகத்தில் செயல்படும் திறன் கொண்டது. இது ஒலியை விட மூன்று மடங்கு வேகமானதாகும்.