TNPSC Thervupettagam

பிரம்மோஸ் ஏவுகணையின் புதிய பதிப்பு

November 30 , 2020 1367 days 595 0
  • இந்தியாவானது நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான புதிய பிரம்மோஸ் ஏவுகணையை அந்தமான் தீவில் சோதனை செய்துள்ளது.
  • இது நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும்  மீயொலி வேக ஏவுகணையாகும்.
  • இந்த ஏவுகணையின் வரம்பானது முந்தைய 290 கிலோ மீட்டரிலிருந்து 400 கிலோ மீட்டர் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • இதன் வேகமானது 2.8 மாக் அல்லது ஒலியின் மூன்று மடங்கு வேகம் என்ற அளவில்  பராமரிக்கப் படுகின்றது.
  • பிரம்மோஸ் II ஏவுகணையானது மாக் 7-8 என்ற வேகத்துடன் தற்போது மேம்பாட்டு நிலையின் கீழ் உள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா உறுப்பினர் ஆன பின்பு, 800 கிலோ மீட்டர் வரம்பு கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையின் புதிய பதிப்பை கட்டமைக்க வேண்டி ரஷ்யாவானது இந்தியாவுடன் இணைய இருக்கின்றது.
  • பிரம்மோஸ் ஏவுகணையின் பெயரானது இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ ஆகிய 2 நதிகளிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது.
  • உலகில் உள்ள விரைவான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை இதுவாகும்.
  • இந்த ஏவுகணையை கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றிலிருந்து ஏவ முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்