ஒலியை விட வேகமாக சென்று தாக்கும் மீயொலி ஏவுகணையான (Supersonic cruise missile) பிரம்மோஸ், உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்டத் தேடியுடன் (Seeker) இணைத்து ராஜஸ்தானின் பொக்ரான் சோதனைத் தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
திறனாய்வு பற்றியத் தொழில்நுட்பமானது (Critical Technology) இது வரை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
இந்த சோதனையின் போது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டத் தேடியுடன் கூடிய இந்த ஏவுகணை துல்லிய இலக்குகளுடன் அதன் பயணப்பாதையில் சரியாக பயணித்தது.
இந்தத் தேடி, DRDO (Defence Research and Development Organisation) ஆய்வகங்களின் உதவியுடன், ஹைதராபாத்திலுள்ள இம்ராத் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டது.
தேடி தொழில்நுட்பம் (Seeker Technology) ஏவுகணையின் துல்லியத் தன்மையை நிர்ணயிக்கிறது.
இந்தியா & ரஷ்யாவின் கூட்டுப் பங்களிப்பான பிரம்மோஸ் ஏவுகணை தரை, கடல் சார்ந்த இலக்குகளை நோக்கி தரை, கடல், கடலடி, வான் ஆகிய பகுதிகளிலிருந்தும் ஏவப்படக்கூடியது.
இராணுவம் & கடற்படை ஏற்கனவே இந்த ஏவுகணையைத் தன்னுடைய படைகளில் இணைத்துள்ள நிலையில் வான்வழி வகையிலான (Air-launched Version) ஏவுகணை, மாற்றியமைக்கப்பட்ட Su-30MKI வானூர்தியிலிருந்து முதன்முறையாக 2017ல் சோதனை செய்யப்பட்டது.