TNPSC Thervupettagam

பிரவாசி பாரதிய திவாஸ் - ஜனவரி 09

January 12 , 2024 319 days 218 0
  • பிரவாசி பாரதிய திவாஸ், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
  • தனது தாயகத்திற்கும் அதன் புலம்பெயர் சமூகங்களுக்கும் இடையே வலுவான தொடர்பை மேம்படுத்தி, பல்வேறு துறைகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை இந்த நாள் குறிக்கிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "பொலிவுறு எதிர்காலத்தினை நன்கு இணைப்பது” என்பதாகும்.
  • பிரவாசி பாரதிய திவாஸ் ஆனது, முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.
  • 1915 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் தேதியன்று, தென்னாப்பிரிக்காவிலிருந்து M.K. காந்தி இந்தியா திரும்பியதைக் குறிப்பதால் இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்