TNPSC Thervupettagam

பிரவாசி பாரதிய திவாஸ் - ஜனவரி 09

January 12 , 2023 590 days 255 0
  • இது வெளிநாடு வாழ் இந்தியர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது இந்தியாவின் மேம்பாட்டிற்கு வெளிநாடுகளில் வாழும் இந்தியச் சமூகத்தினரின் பங்களிப்பு மற்றும் சாதனைகளைக் குறிக்கும் வகையில் ஜனவரி 09 ஆம் தேதியன்று கொண்டாடப் படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
  • 1915 ஆம் ஆண்டில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்திய நாட்டிற்குத் திரும்பிய நிகழ்வினையும் இந்தத் தினம் நினைவு கூர்கிறது.
  • இத்தினமானது முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • இந்த நாளில் பிரவாசி பாரதிய சம்மான் விருதுகள் வழங்கப் படுகின்றன.
  • இந்த விருதுகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன - அவையாவன பிரவாசி பாரதிய சம்மான், பிரவாசி பாரதிய சம்மான் தங்கம், மற்றும் பிரவாசி பாரதிய சம்மான் வாழ்நாள் சாதனை ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்