TNPSC Thervupettagam

பிரவாசி பாரதிய திவாஸ்

January 8 , 2018 2515 days 1024 0
  • வருடாந்திர ஆசியான்-இந்திய பாரதிய திவாஸ் (ASEAN – India Pravasi Bharathiya Divas) அண்மையில் சிங்கப்பூரில் கொண்டாடப்பட்டது.
  • 2018-ஆம் ஆண்டிற்கான பிரவாசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சியின் கருத்துரு Þ “பண்டைய வழித்தடம், புதிய பயணம்; ஆற்றல் வாய்ந்த ஆசியான் – இந்தியா கூட்டிணைவிலுள்ள புலம் பெயர்ந்தோர்“ (Ancient Route,  New Journey; Diaspora in the Dynamic ASEAN – India Partnership)
  • இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆற்றும் பங்கை முன்னெடுத்துக் காட்டுவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 9ஆம் தேதி பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை வழி நடத்தியவரும், இந்தியர்களின் வாழ்வை மாற்றியமைத்தவருமான மகாத்மா காந்தி,  தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று தான் இந்தியாவிற்கு திரும்பினார். அந்த வரலாற்று நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 9ல் பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகின்றது.
  • மேலும் இந்தியா-ஆசியான் நாடுகளின் கூட்டிணைவின் 25-வது வருடமான இவ்வாண்டோடு ஒருங்கே அமையும் வகையில் இந்நிகழ்வும் நேரிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்