TNPSC Thervupettagam

பிரவாஸி பாரதிய திவாஸ்

May 5 , 2018 2270 days 977 0
  • 2019-ஆம் ஆண்டு, ஜனவரி 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை உத்திரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் 15-வது பிரவாஸி பாரதிய திவாஸ் (15th Pravasi Bharatiya Divas) நடைபெற உள்ளது.
  • இந்த 15-வது பிரவாஸி பாரதிய திவாஸின் கருப்பொருள், “புதிய இந்தியாவின் கட்டமைப்பில் இந்தியப் புலம்பெயர்ந்தோரின் செயற் பாத்திரம்” (Role of Indian Diaspora in building a New India) என்பதாகும்.
  • உத்திரப் பிரதேச மாநில அரசுடன் கூட்டிணைந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (Ministry of External Affairs-MEA) இந்த மிகப்பெரிய நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உள்ளது.
  • இந்த நிகழ்ச்சியை இந்தியப் பிரதமரும், மொரிஸியஸ் பிரதமரான பிரவிந்த் ஜீக்னவ்த்தும் (Pravind Jugnauth) தொடங்கி வைக்க உள்ளனர்.
  • பிரவாஸி பாரதிய திவாஸ் ஆனது இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 9-ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
  • 1915-ஆம் ஆண்டு, ஜனவரி 9-ஆம் தேதி அன்று தேசத்தந்தையான மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியதை நினைவு கூர்வதற்காக ஆண்டுதோறும் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த வெளிநாட்டுவாழ் இந்திய சமுதாயத்தினர் (overseas Indian community) வழங்கும் பங்களிப்பினை குறிப்பதாக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
  • இத்தினமானது 2003-ஆம் ஆண்டு முறையாகத் தோற்றுவிக்கப்பட்டது.
  • புலம்பெயர் இந்தியர்கள் விவாகாரத்துறை அமைச்சகம் (Ministry of Overseas Indian Affairs), வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வணிகக் கழகங்களின் சம்மேளனம் (Federation of Indian Chambers of Commerce and Industry-FICCI), இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (Confederation of Indian Industry-CII) ஆகியவற்றினால் இத்தினத்திற்கு ஆதரவு வழங்கப்படுகின்றது.
  • 14-வது பிரவாஸி பாரதிய திவாஸ் ஆனது “புலம்பெயர் இந்தியர்களுடனான ஈடுபாட்டை மறுவரையறை செய்தல்” (Redefining Engagement with the Indian Diaspora) எனும் கருப்பொருளோடு 2017 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்