2019-ஆம் ஆண்டு, ஜனவரி 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை உத்திரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் 15-வது பிரவாஸி பாரதிய திவாஸ் (15th Pravasi Bharatiya Divas) நடைபெற உள்ளது.
இந்த 15-வது பிரவாஸி பாரதிய திவாஸின் கருப்பொருள், “புதிய இந்தியாவின் கட்டமைப்பில் இந்தியப் புலம்பெயர்ந்தோரின் செயற் பாத்திரம்” (Role of Indian Diaspora in building a New India) என்பதாகும்.
உத்திரப் பிரதேச மாநில அரசுடன் கூட்டிணைந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (Ministry of External Affairs-MEA) இந்த மிகப்பெரிய நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியை இந்தியப் பிரதமரும், மொரிஸியஸ் பிரதமரான பிரவிந்த் ஜீக்னவ்த்தும் (Pravind Jugnauth) தொடங்கி வைக்க உள்ளனர்.
பிரவாஸி பாரதிய திவாஸ் ஆனது இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 9-ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
1915-ஆம் ஆண்டு, ஜனவரி 9-ஆம் தேதி அன்று தேசத்தந்தையான மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியதை நினைவு கூர்வதற்காக ஆண்டுதோறும் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த வெளிநாட்டுவாழ் இந்திய சமுதாயத்தினர் (overseas Indian community) வழங்கும் பங்களிப்பினை குறிப்பதாக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
இத்தினமானது 2003-ஆம் ஆண்டு முறையாகத் தோற்றுவிக்கப்பட்டது.
புலம்பெயர் இந்தியர்கள் விவாகாரத்துறை அமைச்சகம் (Ministry of Overseas Indian Affairs), வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வணிகக் கழகங்களின் சம்மேளனம் (Federation of Indian Chambers of Commerce and Industry-FICCI), இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (Confederation of Indian Industry-CII) ஆகியவற்றினால் இத்தினத்திற்கு ஆதரவு வழங்கப்படுகின்றது.
14-வது பிரவாஸி பாரதிய திவாஸ் ஆனது “புலம்பெயர் இந்தியர்களுடனான ஈடுபாட்டை மறுவரையறை செய்தல்” (Redefining Engagement with the Indian Diaspora) எனும் கருப்பொருளோடு 2017 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்றது.