TNPSC Thervupettagam

பிரஸ்டன் வளைவு

June 7 , 2024 41 days 269 0
  • பிரஸ்டன் வளைவு என்பது ஒரு நாட்டில் ஆயுட்காலம் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றுக்கு இடையே காணப்படும் ஒரு குறிப்பிட்ட செயலறிவுத் தொடர்பினைக் குறிக்கிறது.
  • இது முதன்முதலில் அமெரிக்க சமூகவியலாளர் சாமுவேல் H. பிரஸ்டன் என்பவரால் 1975 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது.
  • அவர் "The changing relation between mortality and level of economic development" என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையை எழுதினார்.
  • ஏழ்மையான நாடுகளில் வாழும் மக்களுடன் ஒப்பிடும் போது, செல்வ வளம் மிக்க நாடுகளில் வாழும் மக்கள் பொதுவாக நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதை அவர் கண்டறிந்தார்.
  • செல்வ வளம் மிக்க நாடுகளில் உள்ள மக்கள் சிறந்த மருத்துவ வசதி, சிறந்த கல்வியறிவு, தூய்மையான சூழலில் வாழ்வது, சிறந்த ஊட்டச்சத்தினைப் பெறுவது போன்றவற்றால் இது சாத்தியமாக உள்ளது.
  • 1947 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு சுமார் 9,000 ரூபாயாக இருந்த இந்தியர்களின் சராசரி தனிநபர் வருமானம் ஆனது 2011 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு 55,000 ரூபாயாக உயர்ந்தது.
  • அதே காலகட்டத்தில், இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் ஆனது வெறும் 32 வயதில் இருந்து 66 வயதுக்கு மேல் ஆக உயர்ந்துள்ளது.
  • இருப்பினும், தனிநபர் வருமானம் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றுக்கு இடையேயான நேர்மறையான தொடர்பு ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குப் பிறகு கிடைமட்டமாக நீள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்