இந்தியக் கடற்படை மும்பையின் மேற்கு கடற்கரை வளர்ச்சிப் பகுதியில் பிரஸ்தான் என்றழைக்கப்படும் பயிற்சியை நடத்தியது.
இந்தப் பயிற்சி மேற்குக் கடற்படைப் பிரிவின் தலைமையகத்தால் நடத்தப்பட்டது.
6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தப் பயிற்சி கடற்சார் பங்குதாரார்களான கடற்படை, கடலோரக் காவல்படை, விமானப்படை, சுங்கம் மற்றும் துறைமுகத் துறை, ஓஎன்ஜிசி ஆகிய அனைவரையும் ஒருங்கிணைக்கத் திட்டமிடுகிறது.
எண்ணெய் பகுதிகளின் மீதான தீ, எண்ணெய் கசிவு, விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்களை தேடி மீட்கும் பணி ஆகியவற்றின் மீது பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.