இமாச்சல பிரதேச மாநில அரசானது பூஜ்ஜிய பட்ஜெட் இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்காக (Zero Budget Natural Farming System) பிராகிரிதிக் கேத்தி குஷால் கிஷான் யோஜனா (‘Prakritik Kheti Khushhaal Kissan Yojana) எனும் திட்டத்தை துவங்கியுள்ளது.
இத்திட்டமானது மண்ணின் உற்பத்தித் தன்மையை அதிகரிக்கும். தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும். தண்ணீர் நிலத்தடி ஊடுருவலை அதிகரிக்கும்.
மேலும் இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாகூர் “பாலிதின் ஹட்டாவோ; பர்யவரன் பச்சாவோ” ('Polythene Hatao Paryavaran Bachao') எனும் ஒரு வாரகால பிரச்சாரத்தைத் துவக்கி வைத்துள்ளார்.