உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல சதுப்பு நிலப்பகுதியான காங்கோ வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள குவெட்டே சென்ட்ரலே பிராந்தியத்தின் (Cuvette Centrale region) சிறந்த பாதுகாப்பு மற்றும் மேலாண்மையினை மேம்படுத்துவதற்காக இந்தோனேசியா, காங்கோ குடியரசு மற்றும் ஜனநாயக காங்கோ குடியரசு (Democratic Republic of Congo-DRC) ஆகிய நாடுகள் கூட்டிணைந்து பிரஜ்ஜாவில்லி பிரகடனத்தில் (Brazzaville declaration) கையெழுத்திட்டுள்ளன.
ஒழுங்குமுறைப் படுத்தப்படாத நிலப் பயன்பாடுகளிலிருந்து இப்பகுதியை பாதுகாப்பதற்காகவும், இப்பகுதியின் நீர்வடிவு மற்றும் சீர்கேட்டினை தடுப்பதற்காகவும் இந்தப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
காங்கோ குடியரசில் உள்ள பிராஜ்ஜாவில்லே பகுதியில் நடைபெற்ற உலக பீட்நிலத் தொடக்கங்களின் மூன்றாவது கூட்டளிப்பாளர்கள் சந்திப்பின் (Third Partners Meeting of Global Peatlands Initiative ) ஒரு பகுதியாக இந்தப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
பீட் நிலங்களானது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த கார்பன் பண்டகமாகும் (Carbon store).
பன் நூற்றாண்டு காலமாக தன்னுள் உட்பூட்டப்பட்டுள்ள கார்பனை சதுப்பு நிலங்கள் உமிழவல்லதால் இந்நிலங்களின் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத சுரண்டலானது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைக்குத் தீங்களிப்பானாக அமைய இயலும்.
பீட்நிலங்களானது மட்கிய கரிமப் பொருட்களின் கலவையை கொண்டுள்ள, பகுதியளவு நீரில் மூழ்கிய, ஆக்ஸிஜன் பற்றாக் குறைவுடைய ஓர் ஈர நிலமாகும் (wetlands).
பீட் நிலத்தினுடைய உயர் கார்பன் உள்ளடக்கமானது அவை நீரின்றி வடியும் போது அவற்றை எரிச்சிதைவிற்கு தனித்துவ பாதிப்படையும் பகுதியாக (uniquely vulnerable to incineration) மாற்றுகின்றது.
காங்கோ வடிநிலத்தில் உள்ள குவெட்டே சென்ட்ரலே பகுதியானது உலகின் மிகப்பெரிய இயற்கையான வெப்பமண்டல பீட் நிலமாகும் (Natural tropical peatlands). இப்பகுதியானது உலகினுடைய பசுமை இல்ல வாயுக்களின் 3 ஆண்டுச் சமமான உமிழ்வு அளவை சேகரம் செய்கின்றது