பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பிராணா என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டு சுவாசக் கருவிகளை மேம்படுத்தியுள்ளனர்.
இந்த சுவாசக் கருவிகள் தானியங்கி வாகனத் தொழிற்துறையில் பெரிதும் பயன்பாடு கொண்ட அழுத்த உணர்விகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப் பட்டுள்ளன.
இந்த சுவாசக் கருவிகள் ஆக்ஸிஜனை அழுத்தப்பட்ட வாயுவுடன் கலக்கின்றது.
சமீபத்தில் இந்தியக் கப்பல் கட்டும் நிறுவன அமைப்பானது தனது பல பயன்பாட்டு ஆக்ஸிஜன் அமைப்பு (MOM - Multi-feed Oxygen Manifold) கொண்ட சுவாசக் கருவிகளை ஆந்திர அரசிற்கு வழங்கியுள்ளது.
MOM சுவாசக் கருவியானது எடுத்துச் செல்ல கூடியதாகவும் ஒரே நேரத்தில் 6 நோயாளிகளுக்குப் பயன் தரும் திறன் கொண்டதாகவும் உள்ளது.