பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பச் சேவை தர வரிசை 2025
February 19 , 2025 4 days 56 0
இந்த அறிக்கையில் மொத்த நிறுவன மதிப்பில் 36 சதவீத பங்களிப்பினைக் கொண்டு இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து, மொத்த நிறுவன மதிப்பில் சுமார் 40 சதவீதப் பங்குடன், தகவல் தொழில்நுட்பச் சேவைகளின் நிறுவன மதிப்பில் இந்தியா தனது முன்னணி நிலையைத் தக்க வைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டில், அறிக்கையின் முதல் 25 இடங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களின் கூட்டு நிறுவ மதிப்பு 163 பில்லியன் டாலர் ஆகும்.
முதல் 25 இடங்களில் உள்ள நிறுவனங்களில் 15 நிறுவனங்களின் நிறுவன மதிப்புகள் அதிகரித்துள்ளன.
அக்சென்ச்சர் நிறுவனத்தின் நிறுவன மதிப்பு ஆனது சுமார் 2 சதவீதம் உயர்ந்து 41.5 பில்லியன் டாலராக உள்ளது.
இது தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மிக அதிக மதிப்புமிக்க தகவல் தொழில் நுட்பச் சேவை நிறுவனமாகத் திகழ்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மதிப்பு 15 சதவீதம் உயர்ந்து 16.3 பில்லியன் டாலராக உள்ளது.
இது தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் முதல் மூன்று மதிப்புமிக்க தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவங்களில் ஒன்றாக உள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனமானது, கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவன மதிப்பில் (சுமார் 18 சதவீதம்) மிகவும் விரைவான ஒரு கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (CAGR) அடைந்துள்ளது.
HCL டெக் நிறுவனம் ஆனது (இந்நிறுவன மதிப்பு சுமார் 17 சதவீதம் அதிகரித்து 8.9 பில்லியன் டாலராக உள்ளது) 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வேகமாக வளரும் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.