TNPSC Thervupettagam

பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பச் சேவை தர வரிசை 2025

February 19 , 2025 3 days 51 0
  • இந்த அறிக்கையில் மொத்த நிறுவன மதிப்பில் 36 சதவீத பங்களிப்பினைக் கொண்டு இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • அமெரிக்காவைத் தொடர்ந்து, மொத்த நிறுவன மதிப்பில் சுமார் 40 சதவீதப் பங்குடன், தகவல் தொழில்நுட்பச் சேவைகளின் நிறுவன மதிப்பில் இந்தியா தனது முன்னணி நிலையைத் தக்க வைத்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில், அறிக்கையின் முதல் 25 இடங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களின் கூட்டு நிறுவ மதிப்பு 163 பில்லியன் டாலர் ஆகும்.
  • முதல் 25 இடங்களில் உள்ள நிறுவனங்களில் 15 நிறுவனங்களின் நிறுவன மதிப்புகள் அதிகரித்துள்ளன.
  • அக்சென்ச்சர் நிறுவனத்தின் நிறுவன மதிப்பு ஆனது சுமார் 2 சதவீதம் உயர்ந்து 41.5 பில்லியன் டாலராக உள்ளது.
  • இது தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மிக அதிக மதிப்புமிக்க தகவல் தொழில் நுட்பச் சேவை நிறுவனமாகத் திகழ்கிறது.
  • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மதிப்பு 15 சதவீதம் உயர்ந்து 16.3 பில்லியன் டாலராக உள்ளது.
  • இது தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் முதல் மூன்று மதிப்புமிக்க தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவங்களில் ஒன்றாக உள்ளது.
  • இன்ஃபோசிஸ் நிறுவனமானது, கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவன மதிப்பில் (சுமார் 18 சதவீதம்) மிகவும் விரைவான ஒரு கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (CAGR) அடைந்துள்ளது.
  • HCL டெக் நிறுவனம் ஆனது (இந்நிறுவன மதிப்பு சுமார் 17 சதவீதம் அதிகரித்து 8.9 பில்லியன் டாலராக உள்ளது) 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வேகமாக வளரும் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்