TNPSC Thervupettagam

பிராந்திய 3R மற்றும் சுழற்சி முறைப் பொருளாதார மன்றம்

March 9 , 2025 24 days 67 0
  • ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான 12வது பிராந்திய 3R மற்றும் சுழற்சி முறைப் பொருளாதார மன்றம் ஆனது இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது.
  • ஆசிய-பசிபிக் பகுதியில் நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்குகள் மற்றும் கார்பன் நடுநிலைமை ஆகிய சில இலக்குகளை அடைவதற்காக சுழற்சி முறை செயல்பாட்டுச் சமூகங்களை ஈடுபடுத்துவது என்பதே இந்த நிகழ்வின் கருத்துருவாகும்.
  • இந்த மன்றமானது, நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகளுக்கான ஒரு செயல் திட்டத்தினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி (3R) கொள்கைகளில் மன்றம் கவனம் செலுத்தியது.
  • இந்த மன்றமானது, இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டில் கம்போடியா நாட்டில் நடத்தப் பட்டது.
  • இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் இந்தூரில் 8வது மன்றம் நடத்தப் பட்டது.
  • உறுப்பினர் நாடுகள் 'ஜெய்ப்பூர் பிரகடனத்தை' ஒரு மனதாக ஏற்றுக் கொண்டதுடன் இந்த மன்றம் நிறைவடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்