TNPSC Thervupettagam

பிராந்திய வானிலை மையம் (RMC) - நுங்கம்பாக்கம்

August 18 , 2019 1798 days 856 0
  • நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை பிராந்திய வானிலை மையம் (RMC - Regional Meteorological Centre) 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிய தனது சிறப்பான பணிக்காக உலக வானிலை அமைப்பால் (World Meteorological Organization - WMO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டில் இந்த அங்கீகாரத்தைப் பெற்ற  ஐந்து மையங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • மற்ற மையங்களாவன மும்பை, பஞ்ஜிம் (கோவா), புனே மற்றும் திருவனந்தபுரம் ஆகியனவாகும்.
  • சென்னை வானிலை ஆய்வு மையமானது கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள முதலாவது நவீன வானிலை மற்றும் விண்வெளிக் கண்காணிப்பு மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இதுபற்றி

  • RMC ஆனது மதராஸ் கண்காணிப்பு மையமாகத் தொடங்கப்பட்டது. 1786 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முதலாவது வானிலை ஆய்வு மையம் இதுவாகும்.
  • இது எழும்பூரில் ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவைச் சேர்ந்த அதிகாரியான வில்லியம் பெட்ரி என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு தனியார் மையமாகும்.
  • 1789 ஆம் ஆண்டில் பெட்ரியின் இந்தத் தனியார் மையமானது ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு மாறியது.
  • பின்னர் அந்த வானிலை ஆய்வு மையம் கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டது.
  • RMC ஆனது 1792 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் மதராஸின் அப்போதைய ஆளுநரான சர் சார்லஸ் ஒக்கேலே  என்பவரால் தொடங்கப்பட்டது.
  • 1875 ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆய்வுத் துறை தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே RMC தொடங்கப்பட்டுள்ளது. 
  • இது தென்னிந்திய தீபகற்பத்தில் உள்ள ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார், இலட்சத் தீவுகள், புதுச்சேரி ஆகிய ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றின் காலநிலை சார்ந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பு மிக்கதாக விளங்குகின்றது.
  • இது இந்திய வானிலைத் துறையின்  (IMD - India Meteorological Department) 6 பிராந்திய வானிலை ஆய்வு மையங்களில் ஒன்றாகும்.
  • இதர பிராந்திய மையங்கள் கொல்கத்தா, குவஹாத்தி, மும்பை, நாக்பூர் மற்றும் புது தில்லி ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்