நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை பிராந்திய வானிலை மையம் (RMC - Regional Meteorological Centre) 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிய தனது சிறப்பான பணிக்காக உலக வானிலை அமைப்பால் (World Meteorological Organization - WMO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இந்த அங்கீகாரத்தைப் பெற்ற ஐந்து மையங்களில் இதுவும் ஒன்றாகும்.
மற்ற மையங்களாவன மும்பை, பஞ்ஜிம் (கோவா), புனே மற்றும் திருவனந்தபுரம் ஆகியனவாகும்.
சென்னை வானிலை ஆய்வு மையமானது கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள முதலாவது நவீன வானிலை மற்றும் விண்வெளிக் கண்காணிப்பு மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இதுபற்றி
RMC ஆனது மதராஸ் கண்காணிப்பு மையமாகத் தொடங்கப்பட்டது. 1786 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முதலாவது வானிலை ஆய்வு மையம் இதுவாகும்.
இது எழும்பூரில் ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவைச் சேர்ந்த அதிகாரியான வில்லியம் பெட்ரி என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு தனியார் மையமாகும்.
1789 ஆம் ஆண்டில் பெட்ரியின் இந்தத் தனியார் மையமானது ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு மாறியது.
பின்னர் அந்த வானிலை ஆய்வு மையம் கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டது.
RMC ஆனது 1792 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் மதராஸின் அப்போதைய ஆளுநரான சர் சார்லஸ் ஒக்கேலே என்பவரால் தொடங்கப்பட்டது.
1875 ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆய்வுத் துறை தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே RMC தொடங்கப்பட்டுள்ளது.
இது தென்னிந்திய தீபகற்பத்தில் உள்ள ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார், இலட்சத் தீவுகள், புதுச்சேரி ஆகிய ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றின் காலநிலை சார்ந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பு மிக்கதாக விளங்குகின்றது.
இது இந்திய வானிலைத் துறையின் (IMD - India Meteorological Department) 6 பிராந்திய வானிலை ஆய்வு மையங்களில் ஒன்றாகும்.
இதர பிராந்திய மையங்கள் கொல்கத்தா, குவஹாத்தி, மும்பை, நாக்பூர் மற்றும் புது தில்லி ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.