TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 19 , 2017 2729 days 1267 0
  • பிராந்தியப் பொருளாதாரக் கூட்டு உடன்பாடு என்பது ஆசியா - பசிபிக் பிராந்திய நாடுகளை உள்ளடக்கிய பெரும் தடையற்ற வணிக ஒப்பந்தம் ஆகும்.
  • இதன் உறுப்பினர்களாவன: இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமல்லாது மேலும் 10 ஆசியான் நாடுகளும் அடங்கும். (ஆசியானின் 10 உறுப்பினர்கள் - புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்).
  • அறிவுசார்ந்த சொத்துகள் , முதலீடுகள் , சரக்கு மற்றும் சேவை , தொலைத்தொடர்பு மற்றும் இணைய வர்த்தகம் ஆகியவை ஆர்.சி.ஈ.பி உடன்பாட்டில் அடங்கும்.
  • TPP வர்த்தக ஒப்பந்தத்திற்கு மாற்றாக RCEP கருதப்படுகிறது. டி.பி.பி எனப்படும் பசிபிக் பிராந்திய வர்த்தக உடன்படிக்கையில் அமெரிக்கா இடம்பெற்றுள்ளது, ஆனால் சீனா இல்லை.
  • TPP இல்லாத நிலையில், RCEP உலகின் மிகப்பெரிய பிராந்திய வர்த்தக அமைப்பாகத் திகழும். பிராந்திய அமைப்பில், உலகின் 45 சதவீத மக்கள் தொகை உள்ளது, மேலும்3 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் நிகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்