பிராந்தியப் பொருளாதாரக் கூட்டு உடன்பாடு என்பது ஆசியா - பசிபிக் பிராந்திய நாடுகளை உள்ளடக்கிய பெரும் தடையற்ற வணிக ஒப்பந்தம் ஆகும்.
இதன் உறுப்பினர்களாவன: இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமல்லாது மேலும் 10 ஆசியான் நாடுகளும் அடங்கும். (ஆசியானின் 10 உறுப்பினர்கள் - புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்).
அறிவுசார்ந்த சொத்துகள் , முதலீடுகள் , சரக்கு மற்றும் சேவை , தொலைத்தொடர்பு மற்றும் இணைய வர்த்தகம் ஆகியவை ஆர்.சி.ஈ.பி உடன்பாட்டில் அடங்கும்.
TPP வர்த்தக ஒப்பந்தத்திற்கு மாற்றாக RCEP கருதப்படுகிறது. டி.பி.பி எனப்படும் பசிபிக் பிராந்திய வர்த்தக உடன்படிக்கையில் அமெரிக்கா இடம்பெற்றுள்ளது, ஆனால் சீனா இல்லை.
TPP இல்லாத நிலையில், RCEP உலகின் மிகப்பெரிய பிராந்திய வர்த்தக அமைப்பாகத் திகழும். பிராந்திய அமைப்பில், உலகின் 45 சதவீத மக்கள் தொகை உள்ளது, மேலும்3 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் நிகழ்கிறது.