15வது பிரிக்ஸ் உச்சி மாநாடானது ஜோகன்னஸ்பர்க் நகரில் தென்னாப்பிரிக்க நாட்டின் அரசினால் நடத்தப்பட்டது.
இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, “பிரிக்ஸ் நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா: பரஸ்பர துரித மேம்பாடு, நிலையான மேம்பாடு மற்றும் உள்ளார்ந்த பலதரப்புத் தன்மைக்கான கூட்டுறவு” என்பதாகும்.
இந்த உச்சிமாநாட்டில், ஐந்தாக இருந்த பிரிக்ஸ் அமைப்பிற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 நாடுகளாக விரிவுபடுத்தப் பட்டது.
இந்த மாநாட்டின் போது எகிப்து, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய சில நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்தன.
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த இந்த நாடுகளின் முழு நேர உறுப்பினர் நிலை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.