TNPSC Thervupettagam

பிரிக்ஸ் கலாச்சாரத் துறை அமைச்சர்கள் சந்திப்பு

October 29 , 2019 1761 days 560 0
  • பிரேசிலின் குரிடிபாவில் நடைபெற்ற பிரிக்ஸ் கலாச்சாரத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரான பிரஹலாத் சிங் படேல் பங்கேற்றார்.
  • பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பிற்கான மற்றொரு துறையாக ‘இலக்கியத்தை’ சேர்க்க இந்தியா முன்மொழிந்துள்ளது.
கூட்டுக் கண்காட்சி @ இந்தியா
  • அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்கள் மீதான பிரிக்ஸ் குழு மற்றும் இந்திய நவீன கலைகளின் தேசியத்  தொகுப்பு ஆகியவை இணைந்து ஒரு கூட்டுக்  கண்காட்சியை நடத்த இருக்கின்றது.
  • இது ‘பிராந்தியப் பிணைப்புகள் மற்றும் கலாச்சாரக் கூட்டு விளைவுகளை கற்பனை செய்தல்’ என்று பெயரிடப்பட்டு, 2019 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் டெல்லியில் நடத்தப்பட இருக்கின்றது.
  • பிரிக்ஸ் ஆனது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து பெரிய தேசியப் பொருளாதாரங்களின் கூட்டமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்