- பிரிக்ஸ் வங்கி ஒத்துழைப்பு நிறுவனத்தின் ஐந்து வங்கிகள் தங்கள் தேசிய நாணயத்தால் கடன்வசதிகளையும், கடன் தரமதிப்பீட்டில் ஒத்துழைப்பையும் ஏற்படுத்த சம்மதித்துள்ளன.
- இந்த ஒப்பந்தம் சீனாவின் ஷியாமென் நகரத்தில் நடைபெற்ற 2017ம் ஆண்டுக்கான பிரிக்ஸின் வருடாந்திர மாநாட்டில் அதன் ஐந்து (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) தலைவர்களால் கையெழுத்திடப்பட்டது.
இதில் கையெழுத்திட்ட ஐந்து வங்கிகள் பின்வருமாறு
- பிரேசில் வளர்ச்சி வங்கி (BNDSS)
- ரஷ்யாவின் நெஷ்கோனம் வங்கி (Vnesheconom Bank)
- இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கி (Export–Import Bank of India – EXIM Bank)
- சீன வளர்ச்சி வங்கி (China Development Bank)
- தென் ஆப்பிரிக்காவின் வளர்ச்சி வங்கி (DBSA)
கடன் வசதி
- “Credit Line” என்று அழைக்கப்படும் வங்கியின் கடன் வசதி என்பது அதிகபட்சமான கடன் நிலுவைத் தொகையை கடன் பெறுபவருக்கு கடன் கொடுப்பவர் அளிக்கும் வகையில் ஒரு நிதி நிறுவனம் அல்லது வங்கிக்கும் ஒரு வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்படும் ஒரு ஒப்பந்தமாகும்.
- கடன் பெற்றவர், ஒப்பந்தத்தில் கூறிய உச்சகட்ட கடன் அளவை பெறாத பட்சத்திலும் ஒழுங்காக தவணைகளை செலுத்திய விதத்திலும் மேற்கொண்டு கடன் பெற முடியும்.