TNPSC Thervupettagam

பிரிக்ஸ் நாடுகள் வரி ஒத்துழைப்பு இயங்கமைப்பு

July 28 , 2017 2530 days 878 0
  • வரிவிதிப்பு ஒத்துழைப்புக்கான இயங்கமைப்பில், ஐந்துபிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த வரிவிதிப்பு ஆணையத்தின் அதிகாரிகள் கையொப்பமிட்டனர். பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த  வரிவிதிப்பு ஆணைய தலைவர்களின் ஐந்தாவது உச்சி மாநாட்டில் கையெழுத்து இடப்பட்ட , இந்த பிரிக்ஸ்  வரிவிதிப்பு ஒத்துழைப்பு இயங்கமைப்பானது   (The BRICS Taxation Cooperation Memorandum), நாடுகளுக்கு இடையே உள்ள வரி ஒத்துழைப்பினை நிர்வாக அளவில் மேம்படுத்தும்முயற்சியாகும்.
  • இதன்படி வரித் தகவல் பரிமாற்றம் , வரி ஆலோசனை மேம்பாடு , ஒருங்கிணைந்த வரிக்கொள்கை போன்ற துறைகளில் ஒத்துழைப்பளிக்க பிரிக்ஸ் நாட்டின்அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.
  • சீனாவின் புஜியான் மாகணத்தில்உள்ள ஜியாமின் நகரில் 2017-க்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு , செப்டம்பர் 3 முதல் 5 வரை நடைபெறவுள்ளது.
  • உலகின் மக்கள் தொகையில் 42 சதவிகிதம் - பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகளின் மொத்தப் பங்களிப்பு12 % இல் இருந்து 23 % ஆக கடந்த பத்து ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. மேலும், உலக வளர்ச்சியில்50% க்கும் அதிகமாக பிரிக்ஸ் நாடுகள் பங்களிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்