பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக்கிற்குப் பதிலாக தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் நியமிக்கப் பட்டுள்ளார்.
650 இடங்களைக் கொண்ட மக்கள் அவையில், பதவி விட்டு விலகும் பிரதமர் ரிஷி சுனக்கின் பழமைவாதக் கட்சியுடனான 121 (-250) போட்டியில் 412 (+211) இடங்களைப் பெற்று தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.
இதன் விளைவாக பழமைவாதக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தின் 14 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரித்தானியத் தமிழர் உமா குமரன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.