TNPSC Thervupettagam

பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை விருது 2020

April 8 , 2020 1572 days 575 0
  • அனுபவம் வாய்ந்த கட்டிடக் கலைஞர்களான யுவோன் ஃபாரெல் மற்றும் ஷெல்லி மெக்னமாரா (Yvonne Farrell and Shelley McNamara) ஆகியோர் சமீபத்தில் 2020 பிரிட்ஸ்கர் பரிசிற்கான  விருதாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
  • டப்ளினைச் சார்ந்த கட்டடக் கலை நிபுணர்களான இவர்கள் உலகளாவிய மதிப்புமிக்க இவ்விருதைப் பகிர்ந்து கொண்ட முதல் இரண்டு பெண்கள் ஆவர். 
  • அவர்களின் குறிப்பிடத்தக்கத் திட்டங்களில் பெருவின் லிமாவில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் அடங்கும். இது ரிபா என்ற சர்வதேசப் பரிசையும் வென்றுயுள்ளது.
  • இது “நவீனக்கால மச்சு பிச்சு” (modern-day Machu Picchu) என்றும் குறிப்பிடப் படுகிறது.
  • பிரிட்ஸ்கர் கட்டிடக் கலைப்  பரிசானது  ஆண்டுதோறும் "வாழும் கட்டிடக் கலைஞர் அல்லது கட்டிடக் கலைஞர்களைக் கெளரவிப்பதற்காக" வழங்கப் படுகிறது.
  • இது பெரும்பாலும் கட்டிடக்கலைக்கான நோபல் பரிசு என்று குறிப்பிடப் படுகிறது.
  • 1979 ஆம் ஆண்டில் ஜே ஏ. பிரிட்ஸ்கர் மற்றும் அவரது மனைவி சிண்டி ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த விருதிற்கு பிரிட்ஸ்கர் குடும்பத்தினராலும் ஹையாட் அறக்கட்டளையினாலும் நிதியுதவி அளிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்