இந்தியாவானது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட அணு ஆயுதத் திறன் கொண்ட, நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரித்திவி – II என்ற தனது ஏவுகணையின் இரவு நேரச் சோதனையை மேற்கொண்டது.
இது 350 கிலோ மீட்டர் தாக்கி அழிக்கும் வரம்பு கொண்டதாகவும் உள்ளது.
இது நடமாடும் (எடுத்துச் செல்லக் கூடிய) ஏவு வாகனத்திலிருந்து ஏவு திறன் கொண்டதாகவும் உள்ளது.
இது 500 முதல் 1000 கிலோ கிராம் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
இது திரவ உந்து விசை இரட்டை இயந்திரத்தினால் செயல்படும் திறன் கொண்டது.
ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் டிஆர்டிஓவினால் மேம்படுத்தப்பட்ட முதலாவது ஏவுகணை இதுவாகும்.