அகதிகளுக்கு உணவு, உடை மற்றும் கல்வி அளித்து உதவியமைக்காக நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மனிதநேய செயல்பாடுகளுக்கு ஆதரவளித்து வரும் பிரியங்கா சோப்ரா யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் சமூக நீதிக்கான அன்னை தெரசா விருது மலாலா யூசுப்சாய், அண்ணா ஹசாரே, கிரண் பேடி, சுஷ்மிதா சென் போன்றோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பெரும் சமூக சீர்திருத்தவாதியான புனித அன்னை தெரசாவின் நினைவாக அவரை கவுரவிக்கும் விதமாக அவர் பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது.
2005-இல் ஹார்மோனி பவுண்டேஷனால் இவ்விருது நிறுவப்பட்டது.
மும்பையில் ஆப்ரஹாம் மதாய் என்பவர் இந்த அமைப்பை நிறுவினார். அன்றிலிருந்து ஆண்டிற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ இவ்விருது வழங்கப்படுகின்றது.
அமைதி, சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றிற்கு பங்காற்றும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.