தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாய (2-வது திருத்தம்) விதிகள், 2019-ஆனது மத்திய பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இது பிரிவு நடவடிக்கை வழக்குகளை (CAL - Class Action Lawsuits) பதிவு செய்வதற்குத் தேவையான வரம்புகளைக் குறிப்பிட்டு இருக்கின்றது.
நிறுவனத்தில் உள்ள உறுப்பினர்களில் குறைந்தது 5 சதவிகிதம் அல்லது 100 உறுப்பினர்கள் இவற்றில் எது குறைவாக இருக்கிறதோ அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இதே விதிகள் நிதி வைப்பாளர்கள் மற்றும் வைப்புத் தொகையை எடுக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
CAL என்பது என்ன?
CAL என்பது அதே போன்று அதே எதிர்வாதியினால் பாதிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் தொடர்புடையதாக இருக்கும் போது தாக்கல் செய்யப்படும் வழக்காகும்.
ஒரு நிறுவன விவகாரங்களின் நடத்தை மற்றும் மேலாண்மை ஆகியவை ஒருதலைப் பட்சமாக இருப்பதாக உணர்ந்தால், முதலீட்டாளர்கள் CAL-ஐப் பதிவு செய்ய முடியும்.
உதாரணம் : 2006-ஆம் ஆண்டில் அமெரிக்க ஆற்றல் நிறுவனமான என்ரோனைச் சேர்ந்த நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊழலானது அதன் திவால் தன்மை மற்றும் பங்குதாரர்களின் செல்வ இழப்புக்கு காரணமாக அமைந்தது.
எனவே, முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்திற்கு எதிராக CAL-ஐப் பதிவு செய்து $7.2 பில்லியன் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றனர்.