ஒடிஸாவிலுள்ள ஏவுகணை சோதனை வரம்பில், பயன்பாட்டாளர் முன்னோட்டத்தின் (User Trial) ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய உள்நாட்டு தொழில்நுட்ப தயாரிப்பான பிரித்வி II ஏவுகணை இராணுவத்தால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
பிரித்வி ஏவுகணையானது 2003-ல் இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒற்றை திரவ எரிபொருள் நிலையுடைய (Single Stage Liquid Fuel) பிரித்வி II ஏவுகணையானது ஒருங்கிணைக்கப்பட்ட வழிநடத்தப்படும் ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (Integrated Guided Missile Development Programme) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையாகும்.
இது தரையிலிருந்து தரை இலக்கை நோக்கி (surface-to-surface) ஏவக்கூடிய ஏவுகணையாகும். இந்த ஏவுகணை 350 கி.மீ. இலக்கு வரம்புடையது.
திரவ எரிபொருள் உந்துதலை பயன்படுத்தும் இரட்டை எஞ்சின்களின் மூலம் ஆற்றல் பெற்று பிரித்வி II செயல்படுகின்றது.
பிரித்வி ஏவுகணை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் கண்டங்களுக்கிடையேயான (Ballistic) ஏவுகணையாகும்.
ஒருங்கிணைக்கப்பட்ட வழிகாட்டு ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாட்டில் மொத்தம் 5 பிரித்வி ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.