TNPSC Thervupettagam
February 4 , 2020 1664 days 616 0
  • ஐக்கிய இராஜ்ஜியமானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU - European Union) அதிகாரப் பூர்வமாக வெளியேறியது. இது 47 ஆண்டுகளாக EUல் உறுப்பினராக இருந்தது.
  • 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய முதலாவது நாடாக பிரிட்டன் உருவெடுத்துள்ளது.
  • இரண்டாம் எலிசபெத் ராணி 2020 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று பிரெக்சிட் மசோதாவுக்குத் தனது அரச ஒப்புதலை வழங்கினார். இது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு வழி வகுத்தது.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஐக்கிய ராஜ்ஜியமானது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகளுடன் சுதந்திரமாக (தடையற்ற முறையில்) பணியாற்றவும் வர்த்தகம் செய்யவும் முடியும்.
  • இருப்பினும், இதற்கு இனிமேல் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புகளில் பிரதிநிதித்துவம்  அளிக்கப்பட மாட்டாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்