125வது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 2021 போட்டியானது பிரான்சின் பாரீசிலுள்ள ஸ்டேட் ரோலண்ட் கரோஸ் என்ற அரங்கில் நடைபெற்றது.
இது 2021 ஆம் ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும்.
இது களிமண் தளத்தில் நடைபெறும் ஒரு போட்டியாகும்.
இது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பினால் (International Tennis Federation) ஏற்பாடு செய்யப் படுகிறது.
நோவாக் ஜோகோவிக் (செர்பியா) அவர்கள் ஸ்டெஃபனோஸ் சிட்ஸிபாசை (கிரேக்கம்) தோற்கடித்து ஆடவர் ஒற்றையர் போட்டியில் பட்டம் வென்றார்.
பார்போரா கிரெஜிகோவா (செக் குடியரசு) என்பவர் அனஸ்தாசியா பவிலியுன்செங்கோவாவை (ரஷ்யா) தோற்கடித்து மகளிர் ஒற்றையர் போட்டியில் பட்டம் வென்றார்.
இது இவருடைய முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
பார்போரா அவருடைய சக ஆட்டக்காரர் கேடெர்லினா சினியாகோவாவுடன் (செக் குடியரசு) இணைந்து பெத்தனி மட்டெக் சான்ட்ஸ் (அமெரிக்கா) மற்றும் இகா ஸ்வெய்டெக் (போலெந்து) ஆகியோரைத் தோற்கடித்து மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றனர்.
2000 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை பிரஞ்சு ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற ஒரே வீராங்கனை பார்போரா கிரெஜிகோவா ஆவார்.
பிரெஞ்சு நாட்டு இணை வீரர்களான பியர் – ஹியூஸ் ஹெர்பர்ட் மற்றும் நிகோலா மஹீத் ஆகியோர் 2021 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் பிரெஞ்சு நாட்டு இணை (ஜோடி) ஆவர்.