பிரேசிலின் அமேசான் பகுதியின் வன இழப்பு ஆனது, முந்தைய ஆண்டை விட 30.6% குறைந்துள்ளது.
12 மாத கால இடைவெளியில், அமேசான் மழைக் காடுகள் 6,288 சதுர கிலோமீட்டர் (2,428 சதுர மைல்) பரப்பினை இழந்துள்ளது.
செராடோ என்று அழைக்கப்படும் பிரேசிலின் பரந்து விரிந்த சவன்னா புல்வெளி பரப்பில் காடழிப்பு ஆனது 25.7% குறைந்துள்ளது என்ற நிலையில் இது கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான முதல் சரிவு ஆகும்.
அழிக்கப் பட்ட பகுதியின் அளவானது, 8,174 சதுர கிலோமீட்டர் (3,156 சதுர மைல்) என்ற அளவினை எட்டியுள்ளது.
இந்தியாவை விட இரண்டு மடங்கு பெரிய பரப்பளவிலான அமேசான் பகுதி, உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளைக் கொண்டுள்ளது என்ற நிலையில் அதில் மூன்றில் இரண்டு பங்கு பிரேசிலில் அமைந்துள்ளது.
அமேசான் நதிப் படுகையானது உலகின் 20% நன்னீர் மற்றும் 16,000 அறியப்பட்ட மர இனங்கள் உள்ளிட்ட பல்லுயிர்ப் பெருக்கத்தினைக் கொண்டுள்ளது.