TNPSC Thervupettagam

பிரேசிலிய நாட்டின் ஹோல்லி மரம் மீண்டும் கண்டுபிடிப்பு

March 8 , 2024 261 days 242 0
  • இதுவரையில் எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட எந்தப் பதிவுமின்றி இருந்து சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு வடகிழக்குப் பிரேசிலில் பெர்னாம்புகோ ஹோல்லி எனப்படும் அரிய வகை பிரேசிலிய மர இனம் சமீபத்தில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த பெர்னாம்புகோ ஹோலி மரம் (லெக்ஸ் சேப்பிஃபார்மிஸ்) ஆனது 12 மீட்டர் (சுமார் 40 அடி) உயரம் வரை வளரக் கூடியது.
  • இந்த மரங்கள் அட்லாண்டிக் காடுகளின் பெரும்பாலான பகுதிகளில் காணப் படுகின்றன.
  • ஆனால் தற்போது அதன் அசல் வன உயிரியல் பகுதியானது சுமார் 7 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்பதோடு அவை பெரும்பாலும் சிறு சிறு பகுதிகளாகவே உள்ளது.
  • இதில் தொலைந்து போன இனங்களைத் தேடுதல் திட்டத்தின் மூலம் மீண்டும் கண்டு பிடிப்பதற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 25 "அதிகம் தேடப்படும்" தொலைந்து போன தாவர மற்றும் விலங்கு இனங்களில் ஹோல்லி மரமும் ஒன்றாகும்.
  • இது, 2017 ஆம் ஆண்டில் இந்த முயற்சி தொடங்கப்பட்டதில் இருந்து "மீண்டும் கண்டு பிடிக்கப் பட்ட" ஒன்பதாவது இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்