பிரேசிலின் அடர்ந்த மழைக்காடுகளில் ஒரு புதிய புலி இனம் என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.
இதற்கு புலி வடிவப் படைவரிப் பூனை (லியோபார்டஸ் பார்டினாய்டுஸ்) எனப் பெயரிடப் பட்டது.
புலி வடிவப் படைவரிப் பூனையானது தோராயமாக வீட்டுப் பூனையின் அளவில் காணப் படும் ஒரு சிறிய காட்டுப்பூனையாகும்.
புலி வடிவப் படைவரிப் பூனையானது கோஸ்டாரிகாவிலிருந்து பனாமா, கொலம்பியா, பெரு, பொலிவியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய பகுதி வரை காணப் படுகின்றது.
இதன் வாழ்விடமானது அதன் தொடர்பு இனங்களான வடக்கு புலி வடிவப் பூனை மற்றும் அட்லாண்டிக் வனப்புலி வடிவப் பூனைகள் காணப்படுகின்ற புல்வெளிகள் மற்றும் புதர் நிலங்களின் புறப்பகுதி ஆகும்.