TNPSC Thervupettagam
February 15 , 2018 2377 days 737 0
  • 1987 ஆண்டின் இந்திய அயலுறவு பணி அதிகாரியான அசோக் தாஸ் பிரேசிலுக்கான இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நடப்பில் மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வரும் இவர் இதற்கு முன் ஐஸ்லாந்திற்கான இந்திய தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
  • பிரிக்ஸ் பொருளாதார குழுவில் உறுப்பினர்களாக உள்ள இந்தியா மற்றும் பிரேசிலானது ஜெர்மனி மற்றும் ஜப்பானுடன் இணைந்து ஜி-4 குழுவின் உறுப்பினர்களாகவும் உள்ளது.
  • இந்தியா மற்றும் பிரேசில் தென் ஆப்பிரிக்காவுடன் இணைந்து இப்சா பேச்சுவார்த்தை மன்றத்தினையும் (IBSA) ஏற்படுத்தியுள்ளது.
  • தெற்கத்திய நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் (South-South Cooperation), ஆசிய-ஆப்பிரிக்க-தென் அமெரிக்க நாடுகளிடையே பெரிய அளவிலான புரிதலை ஏற்படுத்துவதும் இப்சாவின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்