TNPSC Thervupettagam

பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு நாடுகளுக்கான பொதுவான பணம்

March 20 , 2023 618 days 266 0
  • பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு நாடுகளும் பொதுவான பணத்தினை உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளன.
  • பிரேசில் பரிந்துரைத்த புதியப் பணமானது "சுர்" (தெற்கு) என அழைக்கப்படும்.
  • இது பிராந்திய வர்த்தகத்தை அதிகரிப்பதோடு, அமெரிக்க டாலரைச் சார்ந்திருக்கும் நிலையினைக் குறைக்கும்.
  • இது முதலில் பிரேசிலிய ரியல் மற்றும் அர்ஜென்டினா பெசோ ஆகியவற்றிற்கு இணையாக புழக்கத்தில் இருக்கும்.
  • ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவிலும் புழக்கத்தில் உள்ள இந்த நாணய அமைப்பானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
  • உலகின் மிகப்பெரிய நாணய முறையான யூரோ, டாலர் மதிப்பில் அடிப்படையில் மதிப்பிடப் படும் போது, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 14 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்