பிர்மிங்ஹாமில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான ஹாரி அத்வால் நடப்பாண்டின் “மிகச்சிறந்த துணிச்சல்மிகு செயலுக்கான பிர்மிங்ஹாம் புகழ்“ விருதுக்கு (Pride of Birmingham’s Outstanding Bravery Award) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற பார்சிலோனா தீவிரவாதத் தாக்குதலில் மிகவும் மோசமாக காயமுற்ற சிறுவனுக்கு உதவுவதற்கு தம் இன்னுயிரையும் பணயம் வைத்தமைக்காக ஹாரி அத்வாலுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 நபர்களுள் ஹாரியும் ஒருவராவர்.
பிர்மிங்ஹாம் மெயில் பத்திரிக்கை (Birmingham Mail newspaper) மற்றும் TSB நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த வருடாந்திர விருது மக்களின் துணிகர வீரச்செயல், இரக்கம், பரிவு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகிறது.