TNPSC Thervupettagam

பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்தம்) மசோதா, 2023

July 30 , 2023 358 days 209 0
  • இந்திய அரசாங்கமானது, 2023 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்தம்) மசோதாவினை  மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.
  • புதிய மசோதாவானது, பிறப்புச் சான்றிதழுக்கு ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்குகிறது.
  • இந்த நடவடிக்கையானது 1969 ஆம் ஆண்டு அசல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்த முன்மொழியப்பட்டத் திருத்தமானது, குழந்தைப் பிறப்பிற்கானப் பதிவின் போது பெற்றோர்கள் மற்றும் தகவல் அளிப்பவர்களின் ஆதார் எண்கள் தேவை என்று கூறுகிறது.
  • இறப்புப் பதிவு மற்றும் சான்றிதழ் வழங்கலை விரைவுபடுத்துவதற்குச் சிறப்பு “சார் பதிவாளர்கள்” நியமனத்தையும் இம்மசோதா முன்மொழிகிறது.
  • ஒரு பதிவாளரை அந்த நபருக்கு ஏழு நாட்களில் இம்மாதிரியான சான்றிதழை வழங்க செய்யுமாறு இது எண்ணுகிறது.
  • இது பிரதி எடுக்கும் வகையிலானச் சான்றிதழ்களுக்குப் பதிலாக எண்ம ரீதியிலான பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழை வழங்கிட எண்ணுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்