தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆனது, பிறப்பு மற்றும் இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை 21 நாட்களுக்குள்ளாக தெரிவிக்க வேண்டும் என்று இந்தியத் தலைமைப் பதிவு (RGI) அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
90% பிறப்பு அல்லது இறப்பு நிகழ்வுகள் இந்தியாவில் பதிவு செய்யப்படுகின்றன.
இருப்பினும், பிறப்பு மற்றும் இறப்புகளை 100% பதிவு செய்யும் ஒரு இலக்கை இன்னும் இந்தியா அடையவில்லை.
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (RBD) சட்டத்தின் 23(2) பிரிவின் படி, "எந்தவொரு பிறப்பு அல்லது இறப்பையும் பதிவு செய்வதில் ஒரு பதிவாளரின் அலட்சியம்" அபராதத்துடன் தண்டிக்கப்படக் கூடியதாகும்.
2023 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட 1969 ஆம் ஆண்டு RBD சட்டம் ஆனது, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் மத்திய அரசின் இணைய தளத்தில் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளையும் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குகிறது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல், பல்வேறு சேவைகளுக்காகப் பிறந்த தேதியினை நிரூபிப்பதற்கான ஒரே ஆவணம் எண்ணிமப் பிறப்புச் சான்றிதழ் ஆகும்.