TNPSC Thervupettagam

பிலிபித் புலிகள் காப்பகம்

November 28 , 2020 1463 days 720 0
  • உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் புலிகள் காப்பகமானது ‘முதலாவது சர்வதேச விருது TX2 என்ற விருதினை வென்றுள்ளது.
  • இது 4 ஆண்டுகளில் தனது புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரித்தற்காக வேண்டி வழங்கப்பட்டு இருக்கின்றது.
  • 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக மாற்றுவதற்கு என்று ஒரு இலக்கானது நிர்ணயிக்கப் பட்டிருந்தது.
  • இது 2018 ஆம் ஆண்டில் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தினால் மேற்கொள்ளப் பட்ட புலிகள் கணக்கெடுப்பு என்பதின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • உலகளாவியப் புலிகள் மன்றம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், புலிகள் பாதுகாப்புத் தரத்திற்கான நிர்ணயங்ங்கள் மற்றும் சிங்கங்களின் பங்கு ஆகியவை இதன் பங்காளர்களாகும்.
  • புலிகள் வாழும் வரம்பைச் சேர்ந்த எந்தவொரு நாடும் பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதில் வெற்றி பெறவில்லை.
  • தற்பொழுது புலிகள் சுதந்திரமாக நடமாடி வரும் வகையில் 13 புலிகள் வாழும் வரம்பு நாடுகள் உள்ளன.
  • இந்தியா, பூடான், வங்க தேசம், கம்போடியா, இந்தோனேசியா, சீனா, ரஷ்யா, மலேசியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர், வியட்நாம் மற்றும் நேபாளம் ஆகியவை இந்தப் புலிகள் வரம்பு நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்