TNPSC Thervupettagam
July 12 , 2023 356 days 229 0
  • சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு ஆனது, பெல்ஜியம் நாட்டின் ஜஸ்டின் ஹெனினுக்கு அதன் உயரிய விருதான பிலிப் சாட்ரியர் விருதினை வழங்கியுள்ளது.
  • ஹெனின் ஏழு கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களையும், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தினையும் வென்றுள்ளார் என்பதோடு, மேலும், 2001 ஆம் ஆண்டில் ஃபெட் கோப்பை வென்ற பெல்ஜியம் அணியில் ஒரு வீரராகவும் இருந்துள்ளார்.
  • இந்த விருதானது, சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரின் பெயரில் 1996 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்த விளையாட்டுத் துறையில் குறிப்பிடத் தக்கப் பங்களிப்பினை ஆற்றிய நபர்களுக்கு இது அங்கீகாரம் அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்