TNPSC Thervupettagam

பிளாட்டிசெப்ஸ் ஜோசெப்பி

May 28 , 2021 1336 days 709 0
  • சர்வதேச ஆராய்ச்சிக் குழு ஒன்று தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் ரேவர் வகை பாம்பின் (raver snake) புதிய இனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளது.
  • இந்தப் புதிய இனத்திற்கு மறைந்த ஊர்வன இன அறிவியல் வல்லுநரான நவீன் ஜோசப் அவர்களின் நினைவாக பிளாட்டிசெப்ஸ் ஜோசெப்பி எனப் பெயரிடப் பட்டு உள்ளது.
  • இந்தப் புதிய இனத்தின் கண்டுபிடிப்பு பற்றி முதுகின விலங்கியல் (Vertebrate Zoology) எனும் இதழில் வெளியிடப்பட்டது.
  • சர்வதேச  இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின் விதிமுறைகளின் படி இந்தப் புதிய உயிரினமானது எளிதில் பாதிக்கப்படக் கூடிய உயிரினங்கள் பிரிவில் (vulnerable) உள்ள ஒரு இனமாக கருதப்பட வேண்டும் என அந்த குழு தெரிவித்துள்ளது.
  • பிளாட்டிசெப்ஸ் ஜோசெப்பி இனப் பாம்புகள் அவற்றின் உடலில் ஒரு தனித்துவம் வாய்ந்த வெள்ளைப் பட்டைகளையும் அவற்றின் தலையில் ஒழுங்கற்ற முறையில் அமைந்த வெள்ளைப் புள்ளிகளையும் கொண்டுள்ளன.
  • இது தமிழ்நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்ட, விஷமற்ற, நிலத்தில் வாழும் ஒரு வகை பாம்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்