உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நாட்டிலுள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடைவிதித்ததோடு அப்பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா பகுதிகளாகவும் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை இந்தியா நடத்தவுள்ளது உள்ளது.
இந்தியாவிலுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அளவானது, மொத்த நிலப்பகுதிகளில் 5% மட்டுமே என்பதற்கான அடையாளத் தொடக்கமே (Symbolic initiative) இந்த அறிவிப்பு ஆகும்.
பிளாஸ்டிக் நுகர்வானது அவற்றின் மூல ஆதாரநிலையில் குறைக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை நன்கு குறைப்பதற்கு பிளாஸ்டிக் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட வேண்டும்.