TNPSC Thervupettagam
March 12 , 2022 898 days 511 0
  • பிளாஸ்மா கதிர்களின் பின்னணியிலுள்ள அறிவியலை அறிவியலாளர்கள் வெளிக் கொணர்ந்துள்ளனர்.
  • பிளாஸ்மா என்பது சூரியனின் குரோமோஸ்பியர் அடுக்கில் எல்லா இடங்களிலும் ஏற்படும் மின்னூட்டம் பெற்ற துகள்களைக் கொண்ட 4 ஆம் நிலைப் பொருளாகும்.
  • ஜெட்ஸ் அல்லது ஸ்பிக்யூல்கள் (கதிர்கள்) மேற்பரப்பிலிருந்து தொடர்ந்து மேலே வீசப் பட்டு பின்னர் ஈர்ப்பு விசையினால் கீழே கொண்டு வரப்படுகின்ற மெல்லிய புல் போன்ற பிளாஸ்மா அமைப்புகளாகும்.
  • இந்த ஸ்பிக்யூல்கள் அல்லது ஜெட்கள் சுமந்து செல்லும் ஆற்றல் மற்றும் உந்தத்தின் அளவானது சூரியன் மற்றும் பிளாஸ்மா வானியல் இயற்பியலில் ஓர் அடிப்படை ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.
  • புலப்படக்கூடிய சூரியனின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள பிளாஸ்மாவானது சூடாக்கப் பட்ட பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரைப் போல, எப்போதும் வெப்பச் சலன நிலையிலேயே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் விவரித்துக் கூறிள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்