TNPSC Thervupettagam

பிளாஸ்மா அலை உமிழ்வு – வாயேஜர் 1

May 16 , 2021 1199 days 619 0
  • வாயேஜர் 1 ஆய்வுக் கலமானது சமீபத்தில் ஒரு ரீங்கார ஒலியைப் பதிவு செய்துள்ளது.
  • அறிவியலாளர்கள் இதற்கு பிளாஸ்மா அலை உமிழ்வுஎனப் பெயரிட்டுள்ளனர்.
  • இந்த ரீங்கார ஒலியானது நட்சத்திர மண்டலங்களுக்கு இடையேயான வாயு நிகழ்வு எனக் கூறப்படுகிறது.
  • முன்னேறிச் செல்லும் வாயேஜர் 1 ஆய்வுக் கலமானது சூரியக் காற்றுக்கும் நட்சத்திர மண்டலங்களுக்கு இடையேயுள்ள ஊடகத்திற்கும் இடையேயான தொடர்புகளைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவும்.
  • இந்த ரீங்கார ஒலியானது குறுகிய அதிர்வெண் அலைவரிசையைக் கொண்டதாகும்.

வாயேஜர் 1

  • வாயேஜர் 1 எனும் கலமானது 2012 ஆம் ஆண்டில் சூரியனின் அயனிச் செறிவு மண்டலத்தினுள் நுழைந்த முதல் விண்கலமாகும்.
  • இது 1977 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
  • சூரிய மண்டலத்தின் வெளிப்பகுதியை ஆய்வு செய்யவும், அதன் வழியில் சனி மற்றும் வியாழன் போன்ற கோள்களைப் பற்றி ஆய்வு செய்யவும் வேண்டி இந்த விண்கலமானது அனுப்பப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்