ஐக்கியப் பேரரசு ஆனது, உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாட்டினை நடத்தியது.
செயற்கை நுண்ணறிவு மீதான “பிளெட்ச்லி பிரகடனம்” ஆனது இந்த உச்சிமாநாட்டில் வெளியிடப் பட்டது.
இது பேரழிவு அல்லது உயிர்களுக்கான அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பது மட்டும் அல்லாமல், மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்குகள் போன்ற முன்னுரிமைகளையும் உள்ளடக்கியது.
இதில் பங்கேற்ற ஐக்கியப் பேரரசு, அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து 27 நாடுகளும் இந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டன.
பிளெட்ச்லி பார்க் பிரகடனம் ஆனது, “frontier AI” மாதிரியால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய பகிரப்பட்டப் புரிதலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Frontier AI என்பது பொது மக்களின் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான திறன்களைக் கொண்ட மிகவும் மேம்பட்ட பயன்மிகு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைக் குறிக்கிறது.