சீனாவைச் சேர்ந்த ‘ஹி பிங்ஜியாவோ’என்பவரை வீழ்த்தியதை அடுத்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி எனும் பெருமையை பி.வி. சிந்து பெற்றுள்ளார்.
இவர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து தனது முதல் ஒலிம்பிக் பங்கேற்பில் மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
டோக்கியா ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
சுசில் குமாரை அடுத்து தனிநபர் போட்டிகளில் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்திய விளையாட்டு வீரர் எனும் பெருமையை பிவி சிந்து பெற்று உள்ளார்.
சுசில் கமார் 2008 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் 2012 ஆம் ஆண்டில் லண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றுள்ளார்.
2012 ஆம் ஆண்டின் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக இந்தியா மொத்தம் 6 பதக்கங்களைப் பெற்றது.