TNPSC Thervupettagam

பீகாரின் சாதிவாரி கணக்கெடுப்பு

October 7 , 2023 286 days 315 0
  • பீகார் மாநில அரசினால் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
  • சுதந்திரத்திற்குப் பின் ஒரு மாநிலம் சாதிக் கணக்கெடுப்பினை மேற்கொண்ட முதல் மாநிலம் இதுவே ஆகும்.
  • பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.07 கோடிக்குச் சற்று அதிகமாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • அந்த மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (36 சதவீதம்) மிகப்பெரிய சமூகப் பிரிவாக உள்ளனர்.
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.13 சதவீதமாக உள்ளதையடுத்து அப்பிரிவினர் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
  • மக்கள்தொகை அடிப்படையில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 14.27 சதவீதமாக உள்ளனர்.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் 19.65 சதவீதம் ஆக உள்ளனர்.
  • சுமார் 22 லட்சம் (1.68 சதவீதம்) மக்கள் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.
  • "உயர் சாதியினர்" என்பதைக் குறிக்கும் "இட ஒதுக்கீடு பெறாத" வகையினர் மொத்த மக்கள் தொகையில் 15.52 சதவீதம் ஆக உள்ளனர்.
  • மொத்த மக்கள் தொகையில் 81.99 சதவீதப் பங்குடன் இந்துக்கள் பெரும்பான்மை சமூகமாக உள்ள நிலையில். அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் 17.70% ஆக உள்ளனர்.
  • இந்த முடிவுகள் தற்போது நடைமுறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான இடஒதுக்கீடு மீதான 50% உச்சவரம்புக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்